பட்டதாரிகளை உளவள அதிகாரிகளாக இணைக்க நடவடிக்கை

​தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 2,703 உளவள அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை உளவள அலுவலர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பில் அப்துல்லா மஹ்ரூப் முன்வைத்த தனிநபர் பிரேரனை மீதான விவாதத்திற்கு கல்வியமைச்சு வழங்கியுள்ள பதிலிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டதாரிகளை உள வள அலுவர்களாக இணைத்து அவர்களுக்கு 3 மாத விசேட பயிற்சிகள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகள் 5 வருடங்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தில் மேற்படி விடயம் தொடர்பில் பாட நெறியை தொடர்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் முதற்கட்டமாக மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்படும்.

இந்நியமனங்களை வழங்குவதற்கு 13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435