நிரந்தர நியமனத்திற்கு தெரிவான தொண்டர் ஆசிரியர் விபரம் விரைவில்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 25ம் திகதி வெளியிடப்படும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 28,29, 30 ஆகிய தினங்களில் நடத்தப்பட்ட வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தெரிவாகியோர் விபரங்களே 25ம் திகதி வெளியிடப்படப்படவுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 1046 தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி அவர்களில் 679 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

தெரிவாகியுள்ள 679 ஆசிரியர்களினதும் பெயர்பட்டியல், எதிர்வரும் 25ம் திகதி அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிடைத்தவுடன் நியமனங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வட மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 176 ஆசிரியர்களும் இந்நியமனத்துக்குள் உள்வாங்க முயற்சிக்கப்பட்ட போதிலும் கூட, பின்னர் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னர், அவர்களுக்கு தனியான ஏற்பாட்டின் கீழ் நியமனங்கள் வழங்க கல்வியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 22ம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435