
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமைச்சு மற்றும் தொழிற்சங்க சேவைகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் நடமாடும் சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் விசேட நடமாடும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக தொழிற்சங்கம் மற்றும் அமைச்சின் சேவைகளை உங்களுடைய பிரதேசத்திலேயே முன்னெடுக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.