வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
30 வருட காலமாக நிலவிய மோதல் காரணமாக வடமாகாணத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதில் சிங்கள மொழி ஆசிரியர் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக அமைந்திருந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக மோதல் நிலவிய காலப்பகுதியில் இருந்து வடமாகாணத்தில் சிங்கள மொழியில் பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மத்தியில் ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு அமைவாக அடிப்படை தகுதிகளை பூர்த்திசெய்துள்ள ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் நிலையான பிரிவிற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.