பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு

நாடுமுழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை (04)  அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இலங்கை பொது சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் ஐந்து பேருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநாகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் 5 பேரும், சுகாதார செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்டு 4 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் பின்னரும் இந் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435