இலங்கை நிர்வாக சேவை தரம் 111 ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை இம்மாதம் 17, 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 92 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் நேற்று (06) தபாலிடப்பட்டதாகவும் அனுமதிப்பத்திரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏதுமிருப்பின் 011 278 5230/ 011 217 7075 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 1911 (24 மணிநேர சேவை) அவசர இலக்கம் ஊடாக திணைக்களத்தின் விசேட பரீட்சைப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.