தோட்டத் தொழிலாளருக்காக கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்தும் வகையில் தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் விடுதலை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்க விரும்புபவர்கள் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தேசியத்தில் தமிழருக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ராஜுபாஸ்கரன் இப்போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

இக்கவனயீர்ப்பு போராட்டமானது மே முதலாம் திகதி 9.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொச்சிக்கடை காளியம்மன் தேவஸ்தானம், புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் ஜிந்துப்பிட்டி விஹாரை ஆகிய மதத்தளங்களில் இடம்பெறும் வழிபாடுகளையடுத்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக கூடி போராட்டம் இடம்பெறவுள்ளது.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொழிற்சங்கம் மற்றும் கட்சி பேதமற்ற முறையில் தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதும் அனைவரையும் பங்கு பற்றும்படி தாழ்மையாக வேண்டுகின்றோம். தொழிலாளர் தினத்தன்று காலை 8.00 மணிக்கு தாங்கள் வழிபடும் ஆலயங்களுக்குச் சென்று தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும் எனவும் அதற்குத் தடையாக செயற்படுவோர் மனங்களில் மாற்றம் ஏற்பட்டு தாங்களாகவே அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தத்தை பிரயோகித்துத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவும் மனப்பாங்கு அவர்களின் மனங்களில் ஏற்பட வேண்டும் என ஆண்டவனை வேண்டி, பிரார்த்தனை செய்வோம்.

காலை 9.00 மணி தொடக்கம் பகல் 12 மணிவரை நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்போது பாராமுகமாக இருப்போரையும் பார்க்க வைக்க உதவும் என நம்புகின்றோம். சம்பளம், கல்வி, சுகா­தாரம், சூழல், பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான சாத்வீகப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் அன்புகூர்ந்து அழைக்கின்றோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேலைத்தளம்/வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435