அடுத்த மாதம் தொடக்கம் உயர்தர தொழிற்கல்விக்காக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 2100 ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் 45 பாடசாலைகளின் 4500 மாணவர்கள் இவ்வாறு உயர்தரத்தில் உள்வாங்கப்படவுள்ளதுடன் 45 பாடசாலைகளுக்கான ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாணவர்களுக்காக 25 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவைக்கு பட்டதாரிகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்றவுடன் பட்டதாரிகளை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.
13 வருட கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 4500 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதுடன் 2019ம் ஆண்டு தொடக்கம் க.பொ.சாதாரண தர மாணவர்கள் தொழிற்கல்விக்காக உள்வாங்குவதற்கு கல்வியமைச்சு திட்டம் வகுத்துள்ளது.
மூலம்- திவயின
வேலைத்தளம்