மகளிர் விவகார திட்டமிடல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரதேச செயலக மட்டங்களில் பெண்கள் அபிவிருத்தி உதவியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம், அரச கொள்கை என்பன பற்றி அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
சிறு வர்த்தக அபிவிருத்தியின் போது பெண்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்கள் பற்றி கவனம் செலுத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
அபிவிருத்திப் பணிகளுக்காக தனியார் முதலீடுகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் போது பிரதேச மட்டத்திலான சிறு வர்த்தகங்களை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களம்/ வேலைத்தளம்