நாடு முழுவதும் உள்ள 20,000 பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
பொது நிருவாக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் யொவுன் சவிய 2017 தொழில் வழிகாட்டி மற்றும் புலமைபரிசில் நிகழ்வு காலியில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
உலக நாடுகளின் அபிவிருத்தி இளைஞர்கள் கைகளில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், பிரதமரின் தலையீட்டில் பத்து இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி 13ம் தரம் வரையில் பாடசாலை கற்றல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இளைஞர் சபை, இளைஞர் சமூகம், கல்வி நிருவாக சேவை பரீட்சை, கல்வியியற் கல்லூரிகள் போன்ற விசேட சேவைகள் இந்நாட்டில் இருக்கும் போது கற்ற இளைஞர் சமூகத்தை நாட்டில் உருவாக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்ததும் கல்வித் துறையில் மாற்றங்களை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே.
நிகழ்காலத்தில் தொழிற்சந்தைக்கு பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காலி மாவட்டத்தில் க.பொ. உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற ஆயிரக்கணக்கமான மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.