திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ம் திகதிக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக சமூக நலன்புரி மற்றும் மத்திய மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக 1900 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அதற்கான பெயர் பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் திரைசேரியின் இறுதி அனுமதி இன்னும் கிடைக்காத காரணத்தினால் நியமனங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், மாகாணசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஒக்டோபர் 25ம் திகதி இடம்பெறவுள்ளமையினால் அதற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு வழங்க முடியாது போகும்பட்சத்தில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.