
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூவாயிரம் சம்பள உயர்வு தமக்கும் வழங்கப்படவேண்டும் மற்றும் சுகாதார அமைச்சு வழங்குவதாக உறுதியளித்த கொடுப்பனவு வழங்கத் தவறியமை என்பவற்றை சுட்டிக்காட்டி அரச மருத்துவமனைகளில் இருதய, நுரையீரல் சிகிச்சை பிரிவு அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது.
இன்று (27) தொடக்கம் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இதனால் இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான எவ்வித சத்திரசிகிச்சையும் முன்னெடுக்கப்படாது என்றும் அச்சங்கத்தின் தலைவர் மங்கல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கராபிட்டிய ஆகிய மருத்துவமனைகளில் இருதய மற்றும் நுழையீரல் பிரிவின் செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் எதிர்காலத்தில் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை பிரிவின் இருதய மற்றும் நுரையீரல் சிகிச்சை பிரிவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்