தீபாவளிப் பண்டிகை முற்பணமாக 10,000 ரூபா பெற்றுத் தரும்படி அக்கரபபத்தனை பிதேச தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகை முற்பணமாக 6 ஆயிரத்து 500 ரூபா பெற்றுக்கொடுக்கவே தோட்ட நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வரும் தீபாவளி முற்பணம் வட்டியில்லாக் கடனாக வழங்கப்பட்டு 10 மாதாந்த தவணைகளில் மீள அறவிடப்பட்டு வருகின்றது.
எனினும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளதால், தீபாவளித் திருநாளைக் கொணடாடுவற்கு 6,500 ரூபா எவ்வகையிலும் போதாது என தோட்டத் தொழிலார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இம்முறை தீபாவளி பண்டிகை முற்பணமாக ரூபா பத்தாயிரத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கத் தலைவர்களிடம் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.