அலுவலகம் மற்றும் வீட்டுப் பிரச்சினை இரண்டையும் சமாளிப்பதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஐந்து அரச ஊழியர்களில் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக உளநல தின நிமித்தம், அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் மனநலம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட பிரிவொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வரிக்கை ஆய்வு செய்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஒப்பிடுகையில் நாட்டில் மனநோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. உலக உளநல தின நிமித்தம் கடந்த 25 ஆண்டுகளாக நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.