நிதிப்பற்றாக்குறையினால் சம்பாந்துறை கல்வி வலய அதிபர், ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக வலய கல்வி அலுவல பிரதம கணக்காளர் கேந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 43,135,287,14 ரூபா நிதி தேவைப்படுவதாக பிரதம கணக்காளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதிப்பற்றாக்குறை பிரச்சினை காரணமாக ஆசிரியர் சேவை உள்ளீர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகளின் போது சம்மாந்துறை கல்விவலயத்தில் கீழுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிலுவைக் கொடுப்பனவு பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக ஆசிரியர்கள் தினமும் வலய கல்வி அலுவலகத்திற்கு வருகைத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர்களின் நியமன பிரமாணகுறிப்பிற்கு அமைவாக சம்பள நிலுவைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்காக கட்டு நிதியாக 43,135,287,14 வழங்குமாறு மாகாணக் கல்விப்பணிமனை ஊடாக திரைசேரியிடம் கோரப்பட்டுள்ளது. குறித்த நிதி கிடைத்ததும் சம்மாந்துறை கல்விவலயத்தில் கடமையாற்றும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று பிரதம கணக்காளர் மேலும் தெரிவித்துள்ளார்.