ஈரான் மற்றும் ஈராக் பிரதேச எல்லையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலஅதிர்வினால் இதுவரை 200 பேர் உயிரிழந்திருப்பதுடன் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஈராக் மற்றும் ஈரான் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு அங்கு வாழும் இலங்கையர் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தூதரக அதிகாரியொருவர் பாிக்கபட்ட பிரதேசத்திற்கு சென்று நிலைமையை ஆராயந்து வந்தார் என்றும் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தகவல்களை அறிந்துக்கொள்வதற்காக பணிகம் 24 மணிநேரமும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நில அதிவின் தாக்கம் நேற்று குவைத்திலும் உணரப்பட்டதாகவும் அதனால் குவைத்தில் பெரும்பாலான மக்கள் வெட்டவௌிகளில் இருந்தனர் என்றும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிச்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவாகியுள்ள இந்நில அதிர்வினால் ஈராக்கில் சுமார் 8 கிராமங்களை பாதித்துள்ளதாகவும் மேற்கூறப்பட்ட எந்த நாட்டிலும் இலங்கையர் பாதிக்கப்பட்டதாக பதிவாகவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.