ஐக்கிய அரபு இராச்சியத்தில் வார இறுதி நாட்களில் கடுங்காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை மற்றும் நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாரம் வௌ்ளிக்கிழமை இரவு அரபிக்கடற்பகுதி மற்றும் ஓமான் கடற்பகுதியில் அலைகள் கடுமையாக இருக்கலாம் என்றும் கடற்கரைக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் இறங்கி நீந்துவதை தவிர்க்குமாறும் தேசிய மையம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் வடக்குமற்றும் கடற்கரை பிரதேசங்களிலேயே இம்மாற்றம் காணப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் இதனால் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை சனிக்கிழமை வரை தொடரும் என்றும் இதனால் வெப்பநிலையும் குறைந்து காணப்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.