வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
1981 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க கொன்சியூலர் தொழிற்படு சட்டத்திற்கமைய, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவினால் அறவிடப்படும் கொன்சுலர் கட்டணங்கள் 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது.
மாற்றியமைக்கப்பட்டுள்ள கொன்சுலர் கட்டணங்கள் பின்வருமாறு:
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கல்விச் சான்றிதழ்களுக்கு – ரூ.500.00
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்திற்கும் – ரூ.1500.00
எந்தவொரு ஏற்றுமதி ஆவணத்திற்கும் – ரூ.6,000.00
வேறு எந்தவொரு ஆவணத்திற்கும் – ரூ.800.00
இதற்கு முந்தைய கொன்சியூலர் கட்டண மாற்றம் 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மேற்கொள்ளப்பட்டது.
கொன்சுலர் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் கொன்சுலர் அலுவல்கள் பிரிவுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்:
கொன்சுலர் அலுவல்கள் பிரிவு
2 ஆவது மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
தொ.இல: 011238812 (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
மு.ப 8.30 – பி.ப 4.15 வரை)
தொலைநகல்: 0112473899
மின்னஞ்சல்: [email protected]
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2017 நவம்பர் 30