மொழி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு மூவாயிரம் மொழி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ஆயிரம் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2018ம் ஆண்டு மூவாயிரம் மொழி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர். நிதியமைச்சுடனான கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொழிக்கல்வி பயிற்சிக்கல்லூரியை பட்டப்படிப்புக்கல்வியாக மேம்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சாதகமான தீர்வும் எட்டப்பட்டுள்ளது. அமைச்சு கிளிநொச்சியில் நிர்மாணிக்கும் அதற்கான கட்டிடத்தை சகவாழ்வு நிலையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் முப்பதாயிரம் அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிப்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
எ