டுபாயில் இரவு பணியாற்ற பொலிஸ் அனுமதி அவசியம்

டுபாயில் இரவுப் பணியில் பணியாற்றுபவர்கள் பொலிஸ் அனுமதி அட்டையை பெறுவது கட்டாயமாகும் என்று அந்நாட்டு பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பணிகளில் ஈடுபடுவோர் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து பொலிஸ் நிலையத்தில் கையளித்து அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இரவு நேர பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் இப்புதிய நடைமுறை செல்லுபடியாகும் என்றும் பணிக்கு செல்வதற்கு முன்னர் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுமதி பெறுவதற்கான வேண்டுகோள் கடிதத்தில் குறிப்பிடப்படவேண்டியவை

  • வழமையான நேரம் தவிர்ந்த மேலதிக நேரத்தில் பணியாற்றுவதற்கான காரணம்
  • பணிதளத்தில் பணியாற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கான ஆதாரம்
  • பணியாற்றும் நிறுவனம் கையெழுத்திட்டுள்ள பணி ஒப்பந்தத்தின் நகல்
  • வர்த்தக அனுமதியின் நகல்
  • வியாபார மையம் அல்லது சொத்து உரிமையாளரிடமிருந்து இரவில் பணியாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதம்
  • வங்கியில் இரவுப்பணியில் ஈடுபடுவதாயின் அதற்கு மத்திய வங்கி வழங்கிய அனுமதிக் கடிதம்

கட்டணம்

  • சேவைக் கட்டணம் – 100 திர்ஹம்
  • அறிவுக் கட்டணம் – 10 திர்ஹம்
  • கண்டுபிடிப்புக் கட்டணம் – 10 திர்ஹம்

சேவை பெறும் இடங்கள்

  • டுபாய் பொலிஸ் உத்தியோகப்பூர்வ இணையதளம்
  • டுபாய் பொலிஸ் அப் (Smart Apps)
  • தகவல் மத்திய நிலையம் 901 (தகவல் பெற மட்டும்)
  • டுபாய் பொலிஸ் நிலையங்கள்
  • டுபாய் பொலிஸ் அலுவலகங்கள் (விற்பனைத் தொகுதிகளில்)
  • நிறைவேற்ற பொறுப்பு திணைக்களம்
  • பொலிஸ் நிலையங்கள் மற்றும் குற்றவியல் விசாரணைகளின் பொதுத் துறை

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435