பணதிருட்டு குறித்து எச்சரிக்கும் UAE பொலிஸார் எச்சரிக்கை

பண பர்ஸ்களை காற்சட்டையின் பின் பொக்கேட்டில் வைக்கவேண்டாம் என்று ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர்


நாட்டில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் சார்ஜா பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். மவீதியில் செல்லும் போது ஏதும் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தால், வாகனத்தை சீர் செய்வதற்கு உதவ முன்வந்தால் கூட யாரையும் நம்ப வேண்டாம்.

அவதானமாக இருங்கள். சில சமயங்களில் சிலர் உங்கள் உடையில் தும்மக்கூடும். பண இயந்திரங்களில் எடுக்கும் பணத்தை அறியாதவர்கள் பார்க்கும் வகையில் எடுக்க வேண்டாம். உங்களை திசை திருப்பி திருவதற்காக உத்தியாகக்கூட இருக்கலாம். எனவே அவதானமாக இருங்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியம் மக்கள் பாதுகாப்பாக வாழும் முயற்சியில் இந்நடவடிக்கை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், சந்தேகப்படும்படியாக யாரும் பணம் எடுக்கும் இயந்திரங்கள், வங்கிகள் அருகில் நடமாடினால் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக 999, 901 என்ற அவசர எண்ணுக்கு அல்லது 065943210 தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்னர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435