புத்தாண்டை முன்னிட்டு பொது துறை பணியாளர்களுக்கு இருநாள் விடுமுறையும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபியில் வாகனங்களை இலவசமாக நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் ஜனவரி இரண்டாம் திகதி 8.00 மணிவரை வாகனங்களை இலவசமாக நிறுத்த முடியும். ஐக்கிய அரபு இராச்சிய அறிவித்தலுக்கு அமைய அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ம் திகதியும் ஜனவரி முதலாம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் தனியார்துறையினருக்கு ஜனவரி முதலாம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.