
அரச கரும மொழி மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை எதிர்வரும் 9,10,11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் 26,27 மற்றும் 28ம் திகதிகளில் தெற்கு, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கேகாலை மாவட்டத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த குறித்த பரீட்சை, காலவரையின்றி பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் பரீட்சை நடத்தப்படும் திகதி மற்றும் நிலையங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ள போதிலும் குழும இலக்கம் மற்றும் பரீட்சை நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படாது என்றும் முன்னைய பரீட்சை அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை www.languagesdept.gov.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்த பெற்றுக்கொள்ள முடியும். அல்லது 0112 888932, 0112 889506, 0112 865428 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்