இவ்வார இறுதியை வௌியிடங்களுக்கு சென்று கொண்டாட விரும்புவோர் காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
மிக குளிர்ச்சியான காலநிலையுடன் பனி மூட்டமும் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம், இன்றைய தினம் (05) ஆகக்குறைந்த வெப்பநிலை 6.2 மேவ்ப்ரா மலை பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் ஓமான் கடலில் அலைகள் வேகமாக வீசும் சாத்தியம் உள்ளதாகவும் நிலம் மற்றும் கரையோரப்பகுதிகளில் மென்மையான காற்று வீசக்கூடும், இரவு மற்றும் அதிகாலையில் பனிக்கொட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.