தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கும் தற்காலிக தொழில் அனுமதியை பெற முடியும் என்று ஐக்கிய அரபு இராச்சிய மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தனியார் துறையில் பணியாற்றுவோர் குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிகமாக இரு இடங்களில் பணியாற்ற முடியும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சட்ட திட்டங்களுக்கு உள்ளமைவாக தற்காலிகமாக இரு நிறுவனங்களில் பணியாற்ற முடியும். ஒரே தொழில் தருநருக்கு சொந்தமான இரு நிறுவனங்களில் பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தற்காலிக தொழில் அனுமதியைப் பெற்றவர்கள் இரு இடங்களிலும் ஒரே மாதியான வேலையை செய்யவும் ஒரே அளவான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
எனினும் ஊழியர்களை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய குடிமகன் அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் ஆறு மாதத்திற்கு மேல் இரு இடங்களில் பணியாற்ற முடியாது. ஊழியர் முதலில் இவ்விடயம் தொடர்பில் அமைச்சில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் ஆண் பெண் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தொழில் அனுமதியானது ஆறு மாதத்திற்கு அதிகமான காலத்தை கொண்டிருத்தல் வேண்டும். புதிதாக வழங்கப்படும் தற்காலிக தொழில் அனுமதி முந்தையதன் காலத்தை விடவும் அதிகமாக இருத்தல் கூடாது.