ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஸ்கைப் பயன்பாடு தடை செய்யப்பட்டதையடுத்து இணையதளமூடான வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சி மீ (C’Me)மற்றும் போடிம் (BOTIM) ஆகிய அப்ளிகேஷன்களை பயன்படுத்தி iOS மற்றும் அன்ரோய்ட் (Android) சேவைகளினூடாக app to app முறை மூலம் வௌிநாடுகளிலும் உள்ள உறவுகளை தொடர்புகொள்ள முடியும் என்கிறது எடிசலாட்.
எடிசலாட்டின் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் இ-லைவ் வீட்டு இணையதள வசதிகளினூடாக பின்வரும் இரு வழிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தமது அன்பானவர்களை தொடர்புகொள்ள முடியும்.
கையடக்க தொலைபேசிகளுக்கான இணையதள அழைப்பு வசதி – app to app அழைப்பு வசதியை பெறுவதற்கு மாதாந்தம் 50 திர்ஹம் நிலையான கட்டண இணையதள வசதியை பெறமுடியும்.
இ லைவ் இணையதள வசதியை பெறுவதற்கு மாதாந்தம் 100 திர்ஹம் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டம் பயன்படுத்தப்படும் அனைத்து இலத்திரனியல் சாதனங்களுக்கும் இத்திட்டம் செல்லுபடியாகும்.
இப்புதிய திட்டத்தினூடாக வாடிக்கையாளர்கள் எல்லையில்லா இணையதள பாவனையை பெற முடியும் என்கிறது எடிசலாட். உலகின் எந்த மூளையில் உள்ளவர்களாயிருந்தாலும் எடிசலாட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்பை தரவிறக்கம் செய்து சிறிய தொகை கட்டணத்திற்கு எல்லையற்ற இணையதள பயன்பாட்டை பெறமுடியும்.