போலிசச்சான்றிதழ்களை வழங்கி, வங்கி ஊழியருக்கு லஞ்சம் வழங்கி வங்ிக்கடன் பெற முயன்ற நான்கு புலம்பெயர் தொழிலாளர் நால்வருக்கு டுபாய் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரும் இந்தியாவைச் சேர்ந்த இருவருமாக நால்வர் இணைந்து இம்மோசடி செயலில் ஈடுபட்டுள்ளனர். சம்பளச் சான்றிதழ், வங்கி அறிக்கை, ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை மற்றும் வீசா பிரதி என அனைத்துமே போலியானவையாக வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பெறும் கடனில் 10 வீதம் வங்கி ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நால்வரும் இணைந்து இவ்வாறாக மூன்று தடவைகள் 40, 000 திர்ஹம் கடனுக்கு விண்ணப்பித்து பணம் பெற்றுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டபின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.