ன்சாரசபை ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து பேரைக் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது .
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ். விரித்தமுல்ல தலைமையில் அமைக்கப்பட்டு இக்குழுவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியொருவரும் அங்கம் வகிக்கிறார் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பொறியியல்துறை சாராத பணிகளில் ஈடுபடும் மின்சாரபை ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலும் இக்குழு விசேட கவனம் செலுத்தும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
சம்பள பிரச்சினையை சுட்டிக்காட்டி மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் நேற்று (18) மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.