நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்சர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (22) காலை 8.30 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது மூடப்பட்டுள்ள வென்சர் தேயிலைத் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறும் அண்மையில் தேயிலை ஏற்றி வந்த டிரக்டர் குடைசாய்ந்ததில் காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறும் குறித்த சாரதியை வேலையை விட்டு நீக்குமாறும் கோரியே இன்று காலை 9. 30 மணி தொடக்கம் 10.30 மணி வரை தொழிற்சாலை முன்பாக இவ்வடையாள வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.
தமது கோரிக்கைக்கு நியாயம் வழங்குமாறு கோரியுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சரியான தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தோட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் உயர் மட்ட முகாமைத்துவத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வு பெற்றுக்கொடுப்பதாக குறித்த தோட்ட அதிகாரி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.