தேசிய நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேல்மாகாண பணியாளர்கள் இன்று காலை முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வேதன முறையையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறதாக அவர் குறிப்பிட்டுள்ளார்;.
நடைமுறைப்படுத்தப்படவேண்டிய புதிய வேதன உயர்வு முறைமை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த விடயத்தில் நிர்வாகிகள் தொடர்ந்தும் அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வருவதாக நீர்வளங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை நான்கு மணிநேரத்துக்கு இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.,
குறித்த காலப்பகுதியில் நுகர்சேவைகள், நாளாந்த பராமரிப்பு பணிகள், அறிக்கையிடல், பற்றுச்சீட்டுக்கான கட்டணம் அறிவிடல் உள்ளிட்ட பணிகள் இடம்பெறமாட்டாது என அவர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் இந்த அடையாள பணிப்புணிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அரசாங்கம் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக நீர்வளங்கல் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.