பொது மன்னிப்புக் காலத்தில் நான்காயிரம் பேர் நாடு திரும்பினர்

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு குவைத் வழங்கியிருந்த பொதுமன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்புக்காலம் நாளைமறுதினத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் பணியகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் சுமார் 15000 பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார். இதேவேளை, அண்மையில் அபுதாபிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு பணியாற்றும் இலங்கையர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அங்குள்ள நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களையும் நாட்டுக்கு திரும்பியழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலா வீசாவினூடாக வௌிநாடுகளுக்கு சென்று பணியாற்றுவதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள அமைச்சர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து வௌிநாடு செல்வது சட்டவிரோதமான செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435