அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லண்ட் பிராந்தியத்திலுள்ள சால்வில் பிரதேசத்தை தாக்கியுள்ள கடுமையான மணற்புயல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசம் கபில நிற புகைமூட்டத்தினால் மறைந்து போயுள்ளதாகவும் அதன் வேகத்தில் மரங்கள் உடைந்து விழுந்து பல வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 96 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் மணற் புயலானது மணிக்கு 200 கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.