கிராம சேவகர் தரம் 111 இற்கு இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தென் மாகாண இளைஞர் யுவதிகளுக்கே இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது. நேற்றைய (23) தினகரன் மற்றும் தினமின பத்திரிகையில் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 22 ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை செயலாளர்், தென் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு, 6ம் மாடி, மாவட்டச் செயலக கட்டிடத்தொகுதி, காலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.