ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பில் சர்வதேச கவனத்திற்கு கொண்டு வர தாம் தீர்மானித்துள்ளதாக சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
அக்கூட்டமைப்பின் சம அழைப்பாளர் சத்துர சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு மத்திய வங்கி அதிகாரிகள் பொறுப்பு கூறவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.