சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் 25% பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதை உறுதிப்பத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது, சகல அரசியல் கட்சிகள், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதற்குரிய அதிகாரசபைகளிடம் கோரிக்கை விடுக்கின்றது.
2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டம், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒதுக்கீடு, சனத்தொகையில் 50% ற்கும் மேற்பட்ட பெண்களை உள்ளடக்கியுள்ள சமூகத்தில் அதன் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக நீண்டகால அர்ப்பணிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதானது பாலின சமத்துவத்திற்கான ஒரு முக்கிய படிநிலையாக அமைவது மட்டுமல்லாது, கொள்கை உருவாக்கத்தில் அதனை உறுதிப்படுத்து அவசியமாகின்றது.
2006 – 2011 காலப்பகுதியில் உள்ளூராட்சித் தேர்களின் போது TISL சுட்டிக்காட்டியவாறு ஒவ்வொரு 100 உள்ளூராட்சி பிரதிநிதிகளில் 2 பேர் பெண்களாவர். இந்த பற்றாக்குறை பிரதிநிதித்துவத்தை வெளிக்கொணர்வதில் 2017ல் அறிமுகப்படுத்திய ஒதுக்கீடு தொடக்க நிலையான செயற்பாடாகும்.
ஒதுக்கீடு தொடர்பாக கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தந்திரமாக சட்டத்திருத்தத்திற்கு அழைத்தமை தொடர்பில் TISL சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சஷி டி மெல் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “சட்டத்திருத்தம் செய்து நடந்து முடிந்த தேர்தல்களில் தாக்கங்களை ஏற்படுத்துவது மக்களின் வாக்குரிமைக்கெதிரான வன்முறையாகும். பெண்களின் அதிகரித்த அரசியல் பிரதநிதித்துவமானது இடையூறாகப் பார்க்கப்படக்கூடாது. இது இலங்கை மக்களின் வெற்றியாகப் பார்க்கப்பட்டவேண்டும், மேலும் இதேபோன்று மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் ஆணையாளர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களின் “உள்ளூர் அதிகார சபைகளின் தீர்மானமானது உள்ளூர் மட்டத்திலேயே எடுக்கப்படவேண்டும். இச்சபைகளின் ஆரம்பித்தலானது இன்னும் நாட்களைக் கடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்” என்ற கூற்றுடன் TISLம் ஒத்துப்போகின்றது. மேலும் பேராசிரியர் ஹுல் “ஒதுக்கீடு சட்டத்தின் ஏற்பாடு எனும் போது விதிவிலக்குகள் இருக்க முடியாது” எனக் குறிப்பிட்டார். 25% பெண்களிற்கான ஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்தாத அனைத்து பங்குதாரர்கள் அனைவருக்கும் அவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மீறுகின்றனர் என்பதையும் இது அதன்படியே கையாளப்படும் என்பதையும் TISL நினைவூட்டுகின்றது.