பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (14)
நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து அத்தியவசிய சேவைகளையும் நிறுத்தப்போவதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்தை நிறுத்தி மீண்டும் சேவைகளை ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மாணியங்கள் குழு தம்மிடம் கோரியபோதும் தமது பிரதான
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையினால் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு தொடக்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்கியுள்ளதாக பல்கலைக்கழக சேவைகள் மாத்திரமன்றி
தொழில்நுட்பசேவை, நிறுவன தண்ணீர், மின்சார சேவைகளும் துப்புறவு பணிகளும் நிறுத்தப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
பல்கலைக்கழக தொழிற்சங்க ஒருங்கிணைப்பின் பொருளாளர் எமது இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மாணவர் சமூகத்துடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு அவர்களும் ஒத்துழைப்பு
வழங்க சம்மதித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.