கேள்வி – தொழிற்சங்கங்களின் நிலைமைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்பன தற்போதைய காலத்தில் எவ்வாறுள்ளது?
பதில் – தொழிலின் பாதுகாப்புக்கு தொழிற்சங்கங்கள் மிகவும் அவசியமானதாகும். தொழில் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை வழங்க தொழிற்சங்கங்கள் அவசியமானது. தொழிலாளர்கள் அமைப்பாக ஒன்று திரளும்போதுதான் அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றெடுக்க முடியும். அதற்கு தொழிற்சங்கள் அவசியமானதாகும்.
கேள்வி – தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்கள் தற்போது எவ்வாறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர்?
பதில் – மேலே குறிப்பிடத்தைப்போன்று ஒவ்வொரு தொழில்துறையை சார்ந்தவர்களுக்கும் தொழிற்சங்கம் என்பது மிகவும் முக்;கியமானதாகும். அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றெடுக்கும் ஒரு கருவிதான் தொழிற்சங்கம். எனவே, தொழிலாளர்கள் தமது தொழில் உரிமைகளை வென்றெடுக்க தொழிற்சங்களில் இணைவது அவசியமாகும். அந்த அடிப்படையிலேயே தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைகின்றனர்.
கேள்வி – உங்கள் தொழிற்சங்க போராட்டம் மூலமாக போராடிப் உரிமைகள் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் உள்ளதா?
பதில் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று முதல் போராட்டம் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. குறிப்பாக,
அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி நிர்வாக சேவையில் முறையற்ற நியமனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
இடமாற்ற சபை மற்றும் இடமாற்ற கொள்ளையை அறிமுகப்படுத்த முடிந்தது. அத்துடன், அரசியல் தேவைகளின் அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை தவிர்க்க முடிந்தது.
மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், Z புள்ளி தொடர்பான பிரச்சினைக்கும் தொழிற்சங்க போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது.
கேள்வி – தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலைகளில் தொழிற்சங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளன?
பதில் – அரசாங்கம் உரிமைகளை மறுப்பதே தற்போது பாரிய சவாலாக உள்ளது. அத்துடன், போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளைப் பாதுகாப்பதும் சவாலாகவே உள்ளது. புதிய உரிமைகளுக்காக போராடுவதைவிடவும், போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடவேண்டிய நிலைமையே உள்ளது. எனவே, பெற்றுக்கொண்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே முக்கியமானமாகும்.
சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டம் இலங்கையில் மே மாதம் 7ஆம் திகதிக்கு மாற்றப்பட்டமை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். ஏப்ரல் 29ஆம் திகதி விசாகப் பூரணை தினக் கொண்டாட்டம் இடம்பெற உள்ளாதால், மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டம் மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதற்கு எதிராக மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.