இலங்கை நில அளவையாளர் சங்கம் இன்று (19) தொடக்கம் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 14ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரு தின அடையாள வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியாக இப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நில அளவையியலாளர்களை பயன்படுத்தி ஆயிரம் கோடி ரூபா செலவில் 11 இலட்சம் காணிகளை அளந்து காணி உறுதி வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கும் போது நல்லாட்சி அரசாங்கம் எவ்விட விலைமனுக்கோரலுமின்றி 2500 கோடி ரூபாவிற்கும் அதிகமான செலவில் நூற்றுக்கு நான்கு வீத வட்டியுடன் வௌிநாட்டு கடனைப் பெற்று அப்பணத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிலஅளவையியலாளர்கள் சங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் ஆலோசகர் ஜே. தடல்லகேவுக்கும் இடையில் கடந்த 16ம் திகதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமும் எட்டப்படாமல் நிறைவுற்றதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் நிலஅளவையியலாளர் சஙகத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அச்சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – மவ்பிம
வேலைத்தளம்