ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலை செய்ய UAEயில் வாய்ப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிற்சந்தையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை இணைத்துக்கொள்ள முடியும். இதனூடாக புலம்பெயர் தொழிலாளர்கள் பகுதி நேர பணிகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மனிதவள அமைச்சின் புதிய முறைக்கமைய புலம்பெயர் தொழிலாளர்கள் மாத்திரமன்றி உள்நாட்டவர்களும் பல நிறுவனங்களில் ஒரே தடவையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கும் மேற்பட்ட தொழில் வழங்குநருக்குக்கீழ் பணியாற்றுவதற்கு ஆரம்ப தொழில் வழங்குநரிடம் அனுமதி பெறவேண்டி அவசியம் கிடையாது. எனினும் அமைச்சின் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். பகுதி நேரமாக எட்டு மணித்தியாலத்திற்கும் குறைவாக பணியாற்றுவோருக்கு வாராந்தம் ஒரு நாள் விடுமுறை வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் போட்டித்தன்மை மிக்க வர்த்த பிரிவிகளில் பணியாற்றுவோரை இரு இடங்களில் பணியாற்ற தொழில் வழங்குநர் அனுமதிக்காதிருக்கலாம். ஆனால் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியை தொடரலாம்.

இப்புதிய நடைமுறையானது தொழிற்சந்தையில் புதிய இலகுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் தொழில் வழங்குநருடைய தொழிலாளர் தேவையையும் பூர்த்தி செய்யும். அத்துடன் வௌிநாட்டு தொழிலாளர்களிடம் தங்கியிருக்கும் நிலையை குறைக்கும். ஆளணிச் செலவைக்குறைக்கும். ஆனால் தொழில் அமைச்சு முன்வைத்துள்ள சட்ட விதிமுறைகளை ஒழுங்கான முறையில் பின்பற்றுவது மிகவும் அவசியம்.

விஞ்ஞானரீதியான, தொழில்நுட்பரீதியான மற்றும் நிர்வாகரீதியான பிரிவுகளுக்கு இவ்வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக குறைந்த தகமையாக பட்டப்படிப்பு பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நிபுணர்களுக்கு 2-3 வருட தொழிற்கல்வி அவசியமாகிறது

ஆரம்ப தொழில்வழங்குநர் ஊழியரை இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கவதற்கு 150 திர்ஹம் தொடக்கம் 2000 திர்ஹம் வரையிலும இரண்டாம் நிலை தொழில் வழங்குநர் 100 திர்ஹமும் அமைச்சுக்கு செலுத்தவேண்டும்.

வருடாந்த விடுமுறை, சேவை நிறைவுக்கு பின்னரான சலுகைகள், ஏனைய நிதி தேவைகள், உரிய வேலை நேரம் போன்றவைக்கு ஆரம்ப தொழில் வழங்குநரே பொறுப்பாவார்.

ஏற்கனவே செய்து கொண்டிருக்கு முழுநேர தொழில் ஒப்பந்த நிறைவடையாமல் குறித்த பகுதி நேரத்தொழிலை முழு நேரமாக மாற்றியமைக்க முடியாது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435