நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுகொடுப்பதற்கான சிறந்த திட்டமொன்றை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் உள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாந்த தேர் கூறியுள்ளார்.
எனினும் அரச நிறுவனங்களில் சுமார் 60 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள தேரர் இதற்கான சரியான தீர்வை வழங்க அரசாங்கம் பின் நிற்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, பட்டதாரிகள் அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரச பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் 6 மாதத்துக்குள் தொழில் பெற்றுகொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.