தொழிற்சங்க பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே உள்ளன – இ.தொ.கா

கேள்வி – தொழிற்சங்கங்களின் நிலைமைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் என்பன தற்போதைய காலத்தில் எவ்வாறுள்ளது?

பதில் – தொழில் துறையைப் பொறுத்தவரை தொழிற்சங்கம் என்பது முக்கியமானதாகும். தொழிற்சங்கங்கள் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினை முடிந்தால் மற்றுமொரு பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். அது ஒரு சக்கரம் போல சுழன்றுகொண்டிருக்கும்.

கேள்வி – தொழிற்சங்கங்கள் தொடர்பில் மக்கள் தற்போது எவ்வாறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர்? மக்கள் மத்தியில் உங்களுக்கான செல்வாக்கு தொடர்ந்தும் உள்ளதா?

பதில் – கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு விமர்சனஙகள் முன்வைக்கப்பட்டன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டது. எனினும், மக்கள் எமக்கு வாக்களித்து அவற்றை பொய்யாக்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும், கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் கனிசான சபைகளையும் கைப்பற்ற முடிந்தது. எனவே, தொழிலாளர்கள் யார்ப்பக்கம் உள்ளனர் என்பதையும், எமது தொழிற்சங்கத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையும் இதனூடாக அறிந்துகொள்ள முடியும்.

கேள்வி – தொழிற்சங்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தாதா?

பதில் – தொழிலாளர் பெருவாரியாக வாழும் பகுதிகளில் தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்டே அரசியல் அமைய முடியும். ஒரு காலத்தில் நூற்றுக்கு நூறு வீதமும், தற்போது நூற்றுக்கு 60வீதமளவிலும் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

எனவே, இங்கு தொழிலாளர்களையும் – தொழிற்சங்கங்களையும் வைத்து அரசியல் நடத்துவதை தவிர்க்க முடியாது. இதனூடாகத்தான் தொழிலாளர்களினது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி – உங்கள் தொழிற்சங்க போராட்டம் மூலமாக போராடிப் உரிமைகள் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பம் உள்ளதா?

பதில் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையத்தில் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமது போராட்டம்மூலம் தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, அவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கல்வித்துறை அபிவிருத்தி என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கு வீட்டு உரிமை பெற்றுக்கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் முதலில் செயற்பட்டது.

மலையகத்தில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் நலன்கருதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கேள்வி – தற்போதைய அரசியல் சமூக சூழ்நிலைகளில் தொழிற்சங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளன?

பதில் – தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படைகளும் இன்;றி காணிப் பகிர்வு இடம்பெறுகின்றது.

எனவே, இநத விடயத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தற்போது ஆலோசித்து வருகின்றோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் பயனளிக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

தொழிலாளர் குடும்பங்கள் சிறந்த முறையில் வாழ்வதற்கான காணிப் பகிர்வு உள்ளிட்ட அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435