ரயில் திணைக்கள பணிப்பகிஷ்கரிப்பு நிறுத்தம்

இன்று (09) நன்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவிருந்த ரயில் திணைக்கள ஊழியர் சங்க பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தமது சம்பள பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்ததையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் பரணவித்தான தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் இயந்திர ஓட்டுநர் சங்கம் நேற்று (08) நள்ளிரவு தொடக்கம் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கவிருந்த நிலையில் ரயில்வே திணைக்கள உயரதிகாரிகளின் தலையீட்டினால் இன்று (09) நன்பகல் வரை வேலைநிறுத்த போராட்டம் பிற்போடப்பட்டது. இன்று அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட சம்பள நிர்ணயம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று சங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று நன்பகல் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்தமும் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435