அபிவிருத்தி அதிகாரிகளை இரு கட்டங்களாக சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது
45 வயதுக்கு குறைந்த வேலையற்ற 20,000 பட்டதாரிகளை பயிற்சியில் இணைத்துக்கொள்ளவது தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய விண்ணப்பித்துள்ள 45 வயதுக்கும் குறைந்த அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதுடன் அவர்களில் 5000 பேர் இவ்வாண்டு ஜூலை மாதமும் மேலும் 15,000 பேர் செப்டெம்பர் மாதமும் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பயிற்சி காலத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன் 2019ம் ஆண்டு வரையில் நடைபெறும் பயிற்சியை பூர்த்தி செய்வோர் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- அத தெரண
வேலைத்தளம்