கடமையை சரிவர செய்யாத அரச ஊழியர்கள் பதவி நீக்கப்படுவர்

மக்களுக்கான சேவையை சரிவர செய்யாது சம்பளத்தை பெற்றுவரும் சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தயவுதாட்சண்யம் பார்க்காது பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பெல்மதுளை தேர்தல் தொகுதியின் அபிவிருத்திக்குழுக்கூட்டம் கடந்த வாரம் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சில அதிகாரிகளும் ஊழியர்களும் காலையில் வழமையாக கடமைக்கு வருவது போல வந்து வரவு பதிவேட்டில் கையொப்பமிட்டபின்னர் கடமைக்காக வௌியில் செல்வதற்கான ஏட்டிலும் கையொப்பமிட்டு சொந்த வேலைகளை செய்ய செல்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அவர்களுடைய சொந்த வியாபாரங்கள், தோட்டங்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுதல் என கடமை நேரத்தை வீணாக்குகின்றனர். அரசாங்க தொழிலில் உள்வாங்கப்படுபவர்கள் அந்நேர கடமைகளை செய்யாமல் சொந்த வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணான செயலாகும்.

இவ்வாறான நபர்கள் இனங்காணப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவதுடன் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

சபரகமுவ மாகாணத்தில் ஒரு மாநகரசபையும் மூன்று நகரசபைகளும் 25 பிரதேசசபைகளுமாக மொத்தம் 29 உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435