UAEயின் அதிகூடிய வெப்பநிலை 49 செல்சியஸ்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் நேர வெப்பநிலை 49 செல்சியஸாக அதிகரிக்கக்கூடும் என்றும் ஆகக்குறைந்த வெப்பநிலை மலை பிரதேசங்களில் 23 செல்சியஸாகும் என்றும் அந்நாட்டு தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிகூடிய வெப்பநிலை மெசைரா பிரதேசத்தில் நேற்று (04) 3.30 மணியளவில் 47.5 செல்சியம் பாகையாக நிலவியதாகவும் இன்று (05)காலை நேர வெப்பநிலை 26.3 செல்ஸியஸ் பாகை ரஸ் கனடா பிரததேத்தில் நிலவியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு பிரதேசத்தில் மேகமூட்டமாக காணப்பட்டாலும் பிற்பகல் வெப்பச்சலனம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும், பொதுவாக மாலை நேரத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இதனால் தூசு கிளம்புவதற்கான வாய்ப்புகள் சில பிரதேசங்களில் காணப்படுவதாகவும் கடலலைகள் வேகமாக எழும்பக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கிலிருந்த வடகிழக்காக மணித்தியாலத்திற்கு 15-25 கிலோ மீற்றரில் இருந்து 35 கிலோ மீற்றர் வேகததில் காசு வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு இந்நிலை தொடரும் என்று சுட்டிக்காட்டியுள்ள வானிலை அவதானநிலையம், வடக்கு பிரதேசத்திலும் காற்று வீசும் சாத்தியங்கள் காணப்படுவதனால் தூசு கிளம்பி தௌிவற்ற நிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435