விரிவுரையாளர் சஜித்தா லக்மாலி
இலங்கை தொழிற்சங்க செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவோமாயின் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்பட்ட போதிலும் செயற்பாட்டு மட்டத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். மேல் மட்ட பதவிகள், தீர்மானங்களை எடுத்தல் போன்ற செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்பு, பிரதிநிதித்துவம் இல்லையென்றே சொல்லாம். அதனால் தொழிற்சங்கங்களில் மட்டுமல்ல, தொழிற்தளங்களிலும், அலுவலகங்களிலும் உள்ள பிரச்சினைகளும் ஆண்களின் பார்வையிலே நோக்கப்படுகின்றன. அதனாலேயே சில நேரங்களில் பெண்களின் பிரச்சினைகள் சரியான முறையில் அடையாளங்காண முடியாது போகிறது.
அதேநேரம், இன்றைய சூழலில் பெண்களில் புது விதமான அழுத்தங்களுக்கே உள்ளாகின்றனர். முன்னர் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளும் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வித்தியாசமானவை. தொழிற்தளங்களிலும் அலுவலகங்களிலும் புது மாதிரியான சுரண்டல்களுக்கே பெண்கள் உள்ளாகின்றனர். இன்றைய வேலைச்சூழல் நவீன முன்னேற்றங்களைக் கொண்டது. இதனால் தாம் எத்தகைய சுரண்டல்களுக்கு உள்ளாகியுள்ளோம் என்பது கூட சில பெண்கள் அறிந்திருப்பதில்லை.
இக்கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா? என்பது தொடர்பான உங்கள் கருத்தை எதிர்வரும் 21ம் திகதி கொள்ளுபிட்டி, ரேணுகா ஹோட்டல் கேட்போர்கூடத்தில் நடைபெறும் தொழிற்சங்க செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளலாம்.