இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் நிலவும் புலனாய்வு உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்களிடமிருந்து போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த ஆணைக்குழுவில் நிலவும் 200 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியுடையவர்களை தெரிவு செய்தவற்காக இவ்வாண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பு, கண்டி, மாத்தறை, குருநாகல், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் இப்போட்டிப்பரீட்சை நடாத்தப்படுகிறது.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி ஆகும்.