தட்டுப்பாட்டைத் தவிர்க்க 10 இலட்சம் கடவுச் சீட்டுக்கள் கொள்வனவு

இலங்கையின் கடவுச் சீட்டுக்களை எபிக் லங்கா தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பத்து இலட்சம் கடவுச் சீட்டுக்களை இந்த நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்துகொள்ள நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ் பி நாவின்ன தெரிவித்துள்ளார்.

கடவுச் சீட்டுக்கான அளவு படிப்படியாக குறைவடைந்துவருவதாக குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

எனினும், இலத்திரனியல் கடவுச் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்வதாக கூறி தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் அமைச்சினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடவுச் சீட்டுக்களை அச்சிடும் பணி, இலங்கையின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனமான டிலாரு நிறுவனத்திடம் கையளிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது.

எனினும், குறித்த நிறுவனத்தினால் கடவுச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஏற்படும் தாமதம் மற்றும் கடவுச் சீட்டு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை கவனத்தில் கொண்டு எபிக் லங்கா தனியார் நிறுவனத்திடமே அந்த பணிகளை மீண்டும் கையளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435