தொடரூந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டுர்ளுரு;கள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட சில தொழிற்சங்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு திடீர் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
தொடரூந்து திணைக்களத்திற்கு சொந்தமான காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முன்னிருத்தி இந்த குறுகிய நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பணிப்புறக்கணிப்பு பிற்பகல் 4.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு மணிநேர காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை முதலான தொடரூந்து நிலையங்களில் பயணத்தை ஆரம்பவிக்கவிருந்த தொடரூந்துகளின் சேவைகள் இடம்பெறவில்லை.
அத்துடன், சில தொடரூந்துகள் பயணத்தின் இடைநடுவிலேயே நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.