தொழிற்சங்கங்கள் – முதலாளிமார் சம்மேளன முதற்கட்ட பேச்சு இணக்கமின்றி முடிவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும். பெருந்தோட்ட யாக்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்து தொழிங்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமானது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுசெயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்தோட்டக் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோரின் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட யாக்கங்கள் சார்பில், முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கனிஸ்க வீரசிங்க முகாமைத்துவ கம்பனிகளின் தலைவர் ரொசான் ராஜதுரை, உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் முதலாளிமார் சம்மேளனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தோட்டங்கள் வழமைபோல நட்டத்தில் இயங்குவதாகவும், எனவே, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பார்க்கின்ற சம்பள உயர்வை வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனத் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது பெருந்தொட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொகை தொடர்பிலோ ஏனைய சலுகைகள் தொடர்பிலேயே எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

இதேநேரம், அடுத்த பேச்சுவார்த்தை குறித்த திகதி நிர்ணயம் இன்றி இன்றைய பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435